நோக்கு

இந்த அமைச்சின் அனைத்து செயற்பாடுகளுக்கும் மூலோபாய திட்டமிடுபவராக இருத்தல் மற்றும் அனைத்து பிரிவுகளுடனும் தொடர்புகொண்டிருக்கும் ஏனைய நபர்களுக்காக தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையொன்றை வழங்குவதோடு சேவையை இலக்காகக் கொண்ட அணுகுமுறையின் ஊடாக கருத்திட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், கண்கானித்தல், இணைப்பாக்கம் மற்றும் மதிப்பீடு என்பவற்றின் மூலம் வெளிநாட்டு உதவி பெறுகின்ற கருத்திட்டங்களுக்கு தூதரக கடமையை நிறைவேற்றுதல்.

முதன்மை நோக்கம்

  • பொறுப்புக்கூற வேண்டிய மற்றும் பதிலளிக்கக்கூடிய முறையில் சேவைகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உதவுதல்.
  • கிராமிய மக்களின் உற்பத்தித் திறனையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துதல்.
  • மாகாண மற்றும் கிராமிய பாதைகளையும் பாலங்களையும் மேம்படுத்துவதன் ஊடாக மாகாணத்தில் தொடர்புகளை வலுப்படுத்துதல்.
  • மாகாண சபைகளைத் தற்பொழுதுள்ள பிற்போக்கு நிலைமையிலிருந்து உயர்த்திவைக்கின்ற அதே நேரத்தில் பொதுமக்களுக்கு மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் குறிப்பாக சிறுநீரக நோய் பரவியுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் வசதிகளை வழங்குதல்.
  • நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளின் உற்பத்தித் திறனையும் நிலைபேறான முகாமைத்துவத்தையும் மேம்படுத்துதல்.
  • நீர் மற்றும் காணி பயன்பாட்டில் உற்பத்தி பயனுறுதியை அடைதல்.
  • நாட்டில் அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை அடைவதற்காக அடிப்படையாகத் தரத்தில் உயர்ந்த ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வியை வழங்குவதற்கான மார்க்கத்தை விரிவாக்குதல்.
  • பொது சுகாதார கட்டகத்தின் தரத்தை உயர்த்துதல் மற்றும் போசாக்கின்மை, தொற்றா நோய்கள் என்பவை தொடர்பான சவால்களுக்கு சிறந்தமுறையில் பதில் அளித்தல்.

முதன்மை செயற்பாடுகள்

கருத்திட்ட பிரிவு
  • தொகுதியில் மூலோபாய திட்டத்தை இற்றைப்படுத்துதல்.
  • தொகுதியில் வருடாந்த செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்தல்.
  • வெளிநாட்டு நன்கொடையில் நடத்தப்படுகின்ற அனைத்து கருத்திட்டங்களையும் கண்காணித்தல் மற்றும் சவால்களை வெற்றிகொள்ளுவதற்காக இருக்கும் சவால்களை அடையாளம் காணுதல்.
  • NSC கூட்டங்களையும் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களையும் நடத்துதல்.
  • அமைச்சரவை பத்திரங்களையும் ஏனைய பத்திரங்களையும் தயாரித்தல்.
  • அமைச்சின் அனைத்து பிரிவுகள், கிளைகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றுடன் ஒழுங்கான இணைப்பாக்கத்தைப் பேணுதல்.
திட்டமிடல் பிரிவு
  • அமைச்சின் வருடாந்த மூலோபாய திட்டத்தைத் தயாரித்து அனைத்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்புதல்.
  • மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரிப்பதோடு சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து தற்பொழுதுள்ள பிரதேச மற்றும் வெளிநாட்டு நன்கொடை பெறுகின்ற கருத்திட்டங்களின் பணிகளைக் கண்காணித்தல்.
  • செயற்பாட்டை அளந்தறிவதற்காக குறித்த தொகுதி, கருத்திட்டம் மற்றும் நிறுவனம் என்பவற்றுடன் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களை நடத்துதல்.
  • எதிர்வரும் ஆண்டுக்காக பொருத்தமான கருத்திட்ட முன்மொழிவுகளை அடையாளம் காணுதல்.
  • புதிய கருத்திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தல்.
  • முன்னைய ஆண்டில் குறைந்த செயலாற்றுகையைப் பதிவுசெய்த கருத்திட்டங்களில் அவ்வாறாவதற்கு ஏதுவான காரண காரியங்களைப் பகுப்பாய்வுசெய்தல்.
  • வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளைத் தயாரித்தல்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு
  • பயன்படுத்துகின்றவருக்கு உரிய தகவல்களை வழங்குவதற்காக வாராந்தம் அமைச்சின் இணையத்தளத்தை இற்றைப்படுத்துதல்.
  • தகவல்களைச் சேகரிப்பதற்காகத் தரவுகள் அடிப்படையொன்றைத் தயாரித்தல்.
  • கருத்திட்டங்களை வெளியிடும் நிலையத்தை அமைத்தல் மற்றும் நடாத்துதல்.
  • அமைச்சில் தற்பொழுதுள்ள தொடர்பாடல் வலையமைப்பு கட்டகத்தை (தொடர்பாடல்) மீளமைத்தல் மற்றும் கண்காணித்தல்.
  • ஏனைய பிரிவுகளுக்கு தகவல் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்.
  • LGN 20 கருத்திட்டத்தை ஆராய்தல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.
  • அமைச்சில் கடுதாசி பாவணையற்ற சூழலொன்றைப் பேணுதல்.