நோக்கு

மாகாண மற்றும் உள்ளூர் ஆளுகைக்கு வலுவூட்டல்

செயற்பணி

பயனுள்ள,ஒத்துளைப்புமிக்க,புத்தாக்கமிகுந்த மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய சமூகங்களில் உயர் தரமான சேவைகளை வழங்கும் ஒரு மாகாண மற்றும் உள்ளாட்சி அமைப்பாகவிருத்தல்

கடமைகளும் பணிகளும்

அரச சேவைகள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின்பேரில் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்துக்கமைய “நாட்டுக்காகச் சேவையாற்றும் கலாசாரமொன்றை” ஏற்படுத்துவதற்குரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி எனும் விடயத்துக்குரிய கொள்கைகளைத் தயாரிப்பதற்கு உதவிபுரிதலும்,தேசிய வரவு செலவு, அரச முதலீடுகள் மற்றும் தேசிய அபிவிருத்திச் செயற்பாடுகளின் கீழான கருத்திட்டங்களைச் செயற்படுத்தலும் தொடராய்வு செய்தலும் மதிப்பீடு செய்தலும்.

அதிவிசேட முன்னுரிமைகள்

  • அரச உத்தியோகத்தர் சிந்தனையிலிருந்து மக்கள் சேவையை சிந்தனையை நோக்கி அரச சேவையை வழிநடாத்துவதற்காகப் பரந்தளவிலான மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டங்ளை நடைமுறைப்படுத்துதல்.
  • மக்களுக்குச் சார்பான சேவைகளுக்கான அரச சேவையில் தகவல் தொழில் நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தலும் தகவல்தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையுடன் தொழில்நுட்ப ஆற்றலை விஸ்தரித்தல்.
  • அரச் சேவையில், மாகாண அரச சேவையில் சேவைகள் இரட்டிப்பாவதைத் தடுக்கும் வகையில் அவ்வாறான நிலைமைகனை ஆராய்ந்து அதனை தடுப்பதற்கான விசேட வழிமுறைகளைத் தயாரித்தல்.
  • உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அதிகாரப் பிரதேசங்களில் பின்தங்கிய கிராமங்களுக்கு  முன்னுரிமை வழங்கி ஆரம்பப் பாடசாலைகள்,வைத்தியசாலைகள்,தாய்சேய் விடுதிகள் என்பவற்றுக்குத் தேவையான விசேட வசதிகளை வழங்குவதற்காகக் குறிப்பிட்ட நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களைத் தயாரித்தல்.
  • மாகாண மற்றும் உள்ளூராட்சி விவசாயப் பாதைகள், கிராமப்புற பதைகள்,உள்ளூராட்சி பாதைகள் ஒரு இலட்சம் வேலைத்திட்ங்களைத் தேசிய மட்டத்திலான பதைகளுடன் ஒருங்ணைக்கும் வகையில் அவற்றை அபிவிருத்தி செய்தலும் வீதிகள் அபிவிருத்தி அதிகார சபையுடன் திட்டமிட்டுச் செயற்படுத்தலும்.

கொள்கைகள் மற்றும் உபாயத் திட்டங்கள்

கொள்கைகள்

மாகாணங்களில் சுயமான உறுதியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தி சமமின்மைகளைக் குறைத்து மற்றும் மொத்தத் தேறிய உற்பத்திக்கு மாகாணங்களிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பினை விருத்தி செய்தல்.

உபாயத் திட்டங்கள்
  • நல்லாட்யின் மூல அம்சங்களைப் பின்பற்றி அந்தந்த மாகாணங்களில் காணப்படும் மானிட மூலதனம் மற்றும் சூழல் வளத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தி சகல மாகாணங்களுக்கும் வருமானத்தை ஈட்டும் இயலுமைகளை விருத்தி செய்தல்.
  • குடியேற்ற வெளியேறுகை உயரிய மட்டத்தில் காணப்படும் மாகாணங்களில் அம்மட்டத்தை மட்டுப்படுத்துவதற்காக மிகுந்த பொருத்தமான கொள்கைகள் மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை வகுத்தலும் அறிமுகப்படுத்தலும்.
  • நாட்டின் மொத்த சமூகப் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குவதற்காக அவ்வவ் மாகாணங்களில் காணப்படும் மானிட வளப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தல்.
  • கீழ் மட்டத்திலிருந்து சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சமூகப் பங்கேற்பினை விருத்தி செய்தல் மூலம் மாகாணங்களில் காணப்படும் வளங்களை நேரடிப் பயன்பாடு மற்றும் கிராமிய சமூகத்தின் இயலுமைகள் மற்றும் திறமைகளை வலுப்படுத்தல்.
  • ஒவ்வொரு மாகாணங்களிலும் காணப்படும் இயற்கை வளங்களை நிலையான செயற்பாட்டிற்கமையப் பயன்படுத்துவதினை உறுதிப்படுத்துவதுடன் அனர்த்த அபாயங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் கூட்டிணைத்தல்.
  • மானிட வள விருத்தி மற்றும் விஞ்ஞான அடிப்படைக்கமைய உள்ளூராட்சி மன்றங்களை மேம்படுத்துவதன் மூலம் பயன்மிக்க வினைத்திறன் கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிருவாக முறையினை உறுதிப்படுத்தல்.