செயற்பணி

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் குறிக்கோள் மற்றும் நோக்கம் என்பவற்றினை அடைந்து கொள்ளும் பொருட்டு அவசியமான நிதிப் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளுதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியினை வினைத்திறனுடன் பயன்படுத்துவது கொண்டு பொதுமக்கள் நிதி தொடர்பாக  வெளிப்படையாக செயற்படுதல்.

அடையப்பெற்றுள்ள இலக்கு

  • ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலமாக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் வெளிநாட்டு கருத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஆகியவை, ஒதுக்கப்பட்ட செயற்பட்டுக்காகவே பயன்படுத்தப்படுகின்றனவா எனவும் அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் மேலதிகமாகக் காணப்படுமிடத்து மாற்றீடு மேற்கொள்வது கொண்டு அனைத்து நிதியினையும் சிக்கனமாகச் செலவு செய்து அது தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதிகள் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய இறுதிக் கணக்குகளை (ஒதுக்கீட்டுக் கணக்கு) உரிய நேரத்திற்கு சபர்ப்பித்தல்.
  • அமைச்சின் குறிக்கோள் மற்றும் நோக்கம் என்பவற்றினை அடைந்து கொள்ளும் நிமித்தம் இயந்திரங்களைக் காலதாமதமின்றி பெற்றுக் கொடுத்தல் மற்றும் அமைச்சுக்குச் சொந்தமான சொத்துக்களை உரிய விதமாக முகாமைத்துவம் செய்தல்.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் கருத்திட்டங்களின் கணக்கறிக்கைகள், மாதாந்தம், காலாண்டு மற்றும் வருடாந்தம் என்ற அமைப்பில், திறைசேரிக்கு உரிய நேரத்தில் சமர்ப்பித்து உரிய நேரத்திற்கு நிதியினைப் பெற்றுக் கொண்டிருத்தல்.
  • B முற்பணக் கணக்கின் கீழ் வேறாகின்ற ஒதுக்கீட்டின் ஊடாக அரச அதிகாரிகளுக்கு காலதாமதமின்றி உரிய கடன் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருத்தல்.
  • அமைச்சுக்கு அவசியமான பண்டங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வது போன்று உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரப் பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக உரிய கொள்முதற் செயற்பாடுகளை வெளிப்படையாக மற்றும் வினைத்திறனுடன் மேற்கொண்டிருத்தல்.
  • கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு மற்றும் உள்ளக ரீதியாக கோரப்படுகின்ற கணக்காய்வு வினாக்களுக்கு காலதாமதமின்றி பதிலளித்தல் மற்றும் சுட்டிக் காட்டப்படுகின்ற குறைபாடுகளை சரி செய்வதற்காக காலதாமதமின்றி செயற்படுதல் மற்றும் அரச கணக்குகள் மன்றத்தில் தேவையேற்படுமிடத்து ஆஜராகுதல்.
  • உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைகளுக்குள் செயற்படுகின்ற பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்காக உடனுக்குடன் நிதி விடுவித்திருத்தல்.